ஊர்க்காவல்படையில் சேர விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூர் மாவட்ட ஊர்க்காவல்படையில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-27 18:45 GMT

திருப்பத்தூர் மாவட்ட ஊர்க்காவல்படையில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் 18 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 20 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தேர்்சி பெறாதவர்கள் சேவை மனப்பான்மை உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியம் கிடையாது.. தொகுப்பூதியம் ரூ.2,800 மட்டுமே வழங்கப்படும். 45 நாள்கள் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் தங்கி பயிற்சி பெற வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை காவல் துணைக் கண்காணிப்பாளர், ஆயுதப்படை வளாகம், திருப்பத்தூர் எனும் முகவரியில் இலவசமாக பெற்று கொள்ளலாம். விண்ணப்பங்களை 30-ந் தேதிக்குள் பெற்று 5 நாட்களுக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்