தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-03 18:22 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்

பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023-ம் கல்வியாண்டில் 1.6.2022 நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவே உரிய கல்வித் தகுதிச் சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்டக்கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க 6-ந்தேதி கடைசி நாள்

காலிப்பணியிட விவரங்கள் முதன்மைக்கல்வி, மாவட்டக்கல்வி, வட்டாரக்கல்வி அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 6-ந்தேதி (புதன்கிழமை) மாலை 5 மணி ஆகும். குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தகவல் பலகையில் வெளியிடப்படும் காலிப்பணியிட விவரங்கள் மாறுதலுக்குட்பட்டது.

மயிலாடுதுறை கல்வி மாவட்ட விண்ணப்பதாரர்கள், deomym@nic.in என்ற மின்னஞ்சலிலும், சீர்காழி கல்வி மாவட்ட விண்ணப்பதாரர்கள் deoskz-ngp@tn.gov.in என்ற மின்னஞ்சலிலும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்