தமிழ் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம்
தமிழ் செம்மல் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ் செம்மல் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ் செம்மல் விருது
தமிழ் வளர்ச்சிக்காக பணியாற்றி வரும் ஆர்வலர்களை கண்டறிந்து அவர்களின் தமிழ் தொண்டினை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஆண்டுதோறும் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தமிழ் ஆர்வலரை தேர்வு செய்து தமிழ் செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது.
2023-ம் ஆண்டிற்கான தமிழ் செம்மல் விருதுபெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் தமிழ் செம்மல் விருதுக்கான விண்ணப்ப படிவத்தினை நேரிலோ, தமிழ் வளர்ச்சித் துறையின் இணையதளத்திலோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கலாம்
தன் விவரக்குறிப்பு நூல்கள், கட்டுரைகள் பெற்ற விருதுகள், தமிழ் சங்கங்களில் பொறுப்பு, தமிழறிஞர் தமிழ் அமைப்புகளின் பரிந்துரை கடிதம், 2 கடவுச்சீட்டு அளவு புகைப்படம், ஆற்றிய தமிழ் பணிகளுக்கான சான்றுகள் ஆகியவற்றை இணைத்து விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் வருகிற அக்டோபர் 9-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்கத்தில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.