தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.

Update: 2023-09-16 17:25 GMT

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு தமிழ் ஆர்வலருக்கு "தமிழ்ச்செம்மல்" விருது, ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த விருது பெற திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம். அதற்கான விண்ணப்பத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் என்ற இணையத்தளத்திலும், வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அலுவலகத்திலும் பெற்று கொள்ளலாம்.

விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் தன் விவரக்குறிப்பு, நூல்கள், கட்டுரைகள் வெளியிட்டிருந்தால் அதன் விவரம் ஒரு பிரதியுடன், தமிழ் சங்கங்கள், தமிழ் அமைப்புகளில் பொறுப்பில் அல்லது உறுப்பினராக இருந்தால் அதன் விவரம், விருதுக்குத் தகுதியாக குறிப்பிடத்தக்க பணிகள்,

தமிழிறிஞர் இருவரிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரைக்கடிதம் அல்லது மாவட்டத்தில் செயல்படும் தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரைக் கடிதம், 2 புகைப்படங்கள், செய்த தமிழ் பணிகளுக்கானச் சான்றுகளையும் இணைத்து வேலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துணை இயக்குனர் அலுவலகத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந் தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்