இலவச எரிவாயு இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம்

இலவச எரிவாயு இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-21 17:23 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட உள்ளது.

இதற்கு பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தேயிலை, முன்னாள் தேயிலை தோட்ட பழங்குடியினர், வனவாசிகள், தீவுகள், நதி தீவுகளில் வசிக்கும் மக்கள், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (கிராமின்), அந்தியோதயா அன்ன யோஜனா ஆகிய திட்டபயனாளிகள், எஸ்.இ.சி.சி. (சமூக பொருளாதார சாதி வாரிகணக்கெடுப்பு -2011) குடும்பத்தினர்கள், 14 அம்ச திட்டத்தின் படி பட்டியலிடப்பட்ட ஏழை குடும்பத்தினர் ஆகியவற்றில் எல்.பி.ஜி. இணைப்பு இல்லாத ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்கள் https://www.pmuy.gov.in என்ற இணையதளத்திலோ, எரிவாயு முகவர்களை அணுகியோ உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்

மேற்கண்ட தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்