அகில இந்திய தொழில்நுட்ப தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - நெல்லை கலெக்டர்

அகில இந்திய தொழில்நுட்ப தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.

Update: 2022-09-10 21:20 GMT

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கைவினை பயிற்சி திட்டத்தின் கீழ் வருகிற 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற் தேர்வில் தனித்தேவர்களாக கலந்து கொள்ள தகுதி உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். தேசிய தொழில் சான்றிதழ் பெற்றவர், ஏற்கனவே ஏதேனும் ஒரு தொழில் பிரிவில் ஐ.டி.ஐ. பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர், தொழில் பிரிவில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அந்த பிரிவில் தேசிய தொழிற் சான்றிதழ் பெறுவதற்காக தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.

திறன்மிகு தேசிய தொழிற் சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர், திறன்மிகு தேசிய தொழில் சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற செக்டருடன் தொடர்புடைய தொழில் பிரிவில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருந்தால் அந்த பிரிவில் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்துடன் இணைய வழியாக தேர்வு கட்டணம் ரூ.200 செலுத்தியமைக்கான செலுத்து சீட்டு, கல்வி சான்றிதழ் நகல் மற்றும் இதர ஆவணங்களின் நகல் ஆகியவற்றை இணைத்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற 12-ந் தேதிக்குள் நெல்லை அரசின் தொழில் பயிற்சி நிலைய துணை இயக்குனரிடம் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்