சாதிசான்றிதழ் கேட்டு மலைவாழ் மக்கள் விண்ணப்பம்

கல்வராயன்மலையில் சாதிசான்றிதழ் கேட்டு மலைவாழ் மக்கள் விண்ணப்பம் கோட்டாட்சியர் நேரில் விசாரணை

Update: 2022-05-28 16:17 GMT

கச்சிராயப்பாளையம்

கல்வராயன்மலையில் 171 மலை கிராமங்கள் உள்ளன. இங்கு 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் கல்வராயன்மலை தாலுகாவுக்குட்பட்ட வெள்ளிமலை, சேராப்பட்டு ஆகிய 2 குறு வட்டங்களில் உள்ள வெள்ளிமலை, சேராப்பட்டு, மணியார்பாளையம், கரியாலூர், கொட்டப்புத்தூர், இன்னாடு, ஆராம்பூண்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் 400 பேர் தங்களுக்கு மலையாளி சாதி சான்றிதழ் வழங்கக்கோரி விண்ணப்பித்து இருந்தனர்.

இதையடுத்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர்(பொறுப்பு) யோகஜோதி நேற்று கல்வராயன்மலை தாலுகா அலுவலகத்துக்கு வந்தார். அப்போது சாதி சான்றிதழ் கேட்டுவிண்ணப்பித்த மலைவாழ் மக்களை ஒவ்வொருவராக அழைத்து விசாரணை நடத்தினார். இதில் தாசில்தார் அசோக், மண்டல துணை தாசில்தார் தேவதாஸ், வருவாய் ஆய்வாளர்கள் செந்தில், வெங்கடேஷ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். விண்ணப்பித்த பல மாதங்களுக்கு பிறகு கோட்டாட்சியர் விசாரணை நடத்தி சாதி சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்துள்ளதை அறிந்து மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்