பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு தின பேரணி

குழித்துறையில் பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு தின பேரணி

Update: 2022-11-26 18:45 GMT

களியக்காவிளை,

குமரி மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு சார்பில் பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு தின பேரணி குழித்துறையில் நடந்தது. கூட்டமைப்பு உறுப்பினர் கிளாடிஸ் லில்லி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை விஜயலட்சுமி ெதாடங்கி வைத்தார். பேரணியானது தபால் நிலைய சந்திப்பில் இருந்து வெட்டுமணி வரை நடந்தது. தொடர்ந்து வெட்டுமணி அந்தோணியார் ஆலய கலையரங்கத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பு தலைவர் சகுந்தலா வரவேற்று பேசினார். வக்கீல் ஜோஸ்பின் தொடங்கி வைத்தார். வக்கீல்கள் காவியா, சுஜா ஜாஸ்மின் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் பஸ் நிலையம் மற்றும் பெண்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீஸ் கண்காணிப்புடன் பாதுகாப்பு வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரி அருகில் போதை பொருட்கள் விற்பதை தடை செய்ய வேண்டும். பெண்கள் மீதான வன்முறை சார்ந்த வழக்குகளை 6 மாத காலத்தில் முடிக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் செயலாளர் சுஜா நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்