உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு

உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு மேற்ெகாண்டனர்.

Update: 2023-01-16 19:38 GMT


மதுரை மண்டல உணவுப்பொருள் கடத்தல்தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சினேகப்ரியாவின் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பொருள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிரிஜிட் மேரி சாத்தூர் பகுதியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு அரிசி அரவை செய்யும் 2 ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆலைகளில் குறைபாடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதேபோன்று மாவட்டத்திலுள்ள 8 அரிசி அரவை ஆலைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். ரேஷன் அரிசி கடத்தல் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்