போதைப்பொருள் ஒழிப்பு கையெழுத்து இயக்கம்

போதைப்பொருள் ஒழிப்பு கையெழுத்து இயக்கம்

Update: 2023-04-08 18:45 GMT

கூடலூர்

கூடலூர் பஸ் நிலைய பகுதியில் போதைப்பொருட்களின் பயன்பாடு, அவற்றின் விற்பனைக்கு எதிரான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு தீர்மானத்தின்படி நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கத்திற்கு கூடலூர் பகுதி தலைவர் நோபில் தலைமை தாங்கினார். கையெழுத்து இயக்கத்தை பகுதி செயலாளர் ரபீக் தொடங்கி வைத்தார். மாணவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்