போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
கோவில்பட்டியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையமும், எஸ்.எஸ். துரைசாமி நாடார்- மாரியம்மாள் கல்லூரியும் இணைந்து சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை நேற்று நடத்தின. ரெயில் நிலையம் முன்பிருந்து புறப்பட்ட ஊர்வலத்தை கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியர்கள் ஸ்ரீராம ஜெயா, ஜெயக்குமார் மற்றும் மாணவ -மாணவிகள், போலீசார் கலந்து கொண்டனர். ஊர்வலம் மெயின் ரோடு வழியாக சென்று பயணியர் விடுதி முன்பு நிறைவடைந்தது.