போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
கயத்தாறில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கயத்தாறு:
கயத்தாறில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை கயத்தாறு புதிய பஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவி சுப்புலட்சுமிராஜதுரை, கயத்தாறு தாசில்தார் சுப்புலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் முடிந்தது.