போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

மணலூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Update: 2022-08-25 16:09 GMT

மூங்கில்துறைபட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மணலூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் அசோக்குமார் தலைமை தாங்கினார். இதில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் போதைபொருள் ஒழிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்தபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. தொடர்ந்து பள்ளி அருகில் உள்ள கடைகளில் போதை பொருள்களை விற்க கூடாது என்றும், போதை பொட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் சங்கராபுரம் ஒன்றியக்குழு துணை தலைவர் அஞ்சலை கோவிந்தராஜ், கவுன்சிலர் செல்வி பாலகிருஷ்ணன், ஊராட்சி செயலர் பாண்டுரங்கன், ஊராட்சி மன்ற துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்