போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

மேல்விஷாரத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-01-04 17:33 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சி மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மேல்விஷாரம் நகர மன்ற தலைவர் எஸ்.டி.முகமது அமீன், துணைத் தலைவர் குல்சார் அஹமத், அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் ஆற்காடு நகர செயலாளர் பரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

ஊர்வலம் மேல்விஷாரம் ஹாஜிப்பேட்டை முதல் தெருவில் இருந்து தொடங்கி கத்தியவாடி கூட்ரோடு வரை சென்று நிறைவடைந்தது. இதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் போதை பழக்கத்திற்கு அடிமை ஆவதால் ஏற்படும் தீங்குகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. மற்றும் உறுதிமொழி ஏற்றனர். இதில் மேல்விஷாரம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் அன்பழகன், உமாசங்கர் நகர மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்