போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

திருச்சியில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை கலெக்டர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2022-08-14 19:39 GMT

திருச்சியில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை கலெக்டர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகிற வகையில் மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டத்தை போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியேற்புடன் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் அருகே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது கலெக்டர் பிரதீப் குமார் பேசுகையில், "முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி திருச்சி மாவட்டத்தில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதைப்பொருள் உடல் நலத்தையும், வாழ்வையும் சீரழித்துவிடும். போதைப்பொருட்களை அறவே வெறுத்து ஒதுக்கிட வேண்டும். இதனை நம்மை சுற்றியுள்ள நண்பர்களிடத்திலும், மக்களிடத்திலும் எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். போதைப்பொருட்கள் இல்லாத மாவட்டமாக திருச்சி மாவட்டம் திகழ்ந்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

4 கிலோ மீட்டர் தூரம்

நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், போலீஸ் துணை கமிஷனர்கள் ஸ்ரீதேவி, அன்பு, இனிகோஇருதயராஜ் எம்.எல்.ஏ., கோட்டாட்சியர் தவச்செல்வம், உதவி ஆணையர் (கலால்) ரெங்கசாமி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மாரத்தான் ஓட்டம் தொடங்கி, அண்ணா விளையாட்டு அரங்கம் வரை 4 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது. இதில் விளையாட்டு வீரர்கள், மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

லால்குடி

இதேபோல் லால்குடியில் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதனை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், லால்குடி வருவாய் கோட்டாச்சியர் வைத்தியநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த ஓட்டம் லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து தொடங்கி 10 கிலோ மீட்டர் தூரம்வரை சென்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், 2-வது பரிசு ரூ.7,500 மற்றும் 8 ேபருக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன், தாசில்தார் சிஸிலினா சுகந்தி, நகராட்சி தலைவர் துரைமணிக்கம், நகராட்சி ஆணையர் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்