24 அணிகள் பங்கேற்கும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி

போதை ஒழிப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியை வடக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் ரம்யா பாரதி தொடங்கி வைத்தார்.

Update: 2023-06-19 07:48 GMT

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் வருகின்ற 26-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போதை பழக்கத்துக்கு ஆளாகாமல் நல்வழிப்படுத்தும் நோக்கத்தில், இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடத்த, சென்னை பெருநகர போலீஸ் வடக்கு மண்டல இணை கமிஷனர் ஆர்.வி.ரம்யா பாரதி உத்தரவிட்டார்.

அதன்படி, மீன்பிடி துறைமுக பகுதியில் உள்ள கசார் மைதானத்தில், சென்னை பெருநகர காவல் துறை சார்பாக 24 அணிகள் பங்கேற்கும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை வடக்கு மண்டல இணை கமிஷனர் ரம்யா பாரதி தொடங்கி வைத்தார். மேலும், இந்த கிரிக்கெட் போட்டியில் பங்குபெறும் வீரர்கள் அனைவருக்கும் போதைப் பொருள் எதிர்ப்பு வாசகம் அடங்கிய டி-ஷர்ட் மற்றும் தொப்பிகளையும் அவர் வழங்கினார்.

முன்னதாக, போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணி தேர்வாணைய உறுப்பினர் ஸ்ரீதரன் சரத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்