ஊழல் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Update: 2022-11-04 18:45 GMT

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் அக்டோபர் 31-ந்தேதி முதல் நவம்பர் 6-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நீடாமங்கலம் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் காந்தி வரவேற்றார்.வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர்கள் அருள்செல்வி, கமலசுந்தரி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு ஊழல் தடுப்பின் முக்கியத்துவம், ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் ஊழல் இல்லா இந்தியா குறித்து பேசினர். தொடர்ந்து அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் அனைவரும் நேர்மைக்கான குடிமக்களின் உறுதி மொழியினை ஏற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்