தக்கலையில் ஊழல் எதிர்ப்பு சங்க கூட்டம்
தக்கலையில் ஊழல் எதிர்ப்பு சங்க கூட்டம் நடந்தது.
தக்கலை,
தக்கலையில் ஊழல் எதிர்ப்பு சங்க கூட்டம் நடந்தது.
சங்க கூட்டம்
ஊழல் எதிர்ப்பு மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் பயனாளிகள் சங்க கூட்டம் தக்கலையில் நடந்தது. தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜாண் முன்னிலை வகித்தார். செயலாளர் ஹென்றி, பொருளாளர் நாகப்பன் ஆகியோர் அறிக்கைகள் படித்தனர். கூட்டத்தில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக காலை மற்றும் மாலை நேரத்தில் கூடுதல் அரசு பஸ்சுகள் இயக்க வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கும் தகவல்களை முறையாக வழங்காத அதிகாரிகள் மீது மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பறவைகளின் வாழ்வாதரத்திற்காக சாலை ஓரங்களில் கனிதரும் மரங்களை நட வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் இணைச்செயலாளர் ஜாண்ரோஸ், அமைப்புச்செயலாளர் குமரேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேரி பாய் நன்றி கூறினார்.