லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கூடலூரில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2022-11-02 18:45 GMT

கூடலூர்,

கூடலூர் காவல்துறை, அரசு மாதிரி பள்ளி சார்பில், லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி கூடலூரில் நேற்று நடைபெற்றது. பேரணியை போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி ராஜகோபாலபுரம், பழைய பஸ் நிலையம், மெயின் ரோடு வழியாக புதிய பஸ் நிலையத்தை அடைந்தது. இதில் கூடலூர் அரசு மாதிரி பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் அய்யப்பன், ஆசிரியர்கள் நல்ல குமார், ரத்னவேல் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்