மாடு முட்டியதில் மேலும் ஒரு வாலிபர் சாவு

கே.வி.குப்பம் அருகே நடந்த காளை விடும் விழாவில் மாடு முட்டியதில் மேலும் ஒரு வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Update: 2023-01-22 14:48 GMT

காளைவிடும் விழா

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த வடுகந்தாங்கல் பகுதியில் உள்ள கீழ்முட்டுக்கூரில் கடந்த 17-ந் தேதி பொங்கல் விழாவையொட்டி காளை விடும் விழா நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாலிபர்கள், பெரியவர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை கண்டுகளித்தனர்.

அப்போது வேகமாக வந்த காளைமாடுகள் முட்டியதில் 5 பேர் படுகாயம் அடைந்து வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், பேரணாம்பட்டு தாலுகா, கொத்தூர் ஊராட்சி, புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவரது மகன் வெங்கடேசனுக்கு (வயது 24) தலை, தொண்டை உள்ளிட்ட பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி கடந்த 21-ந் தேதி உயிர்இழந்தார்.

மேலும் ஒருவர் பலி

இந்தநிலையில் இதே காளை விடும் விழாவில் மாடுமுட்டி காயம் அடைந்து சிகிச்சை பெற்றுவந்த ஆம்பூர் தாலுகா, பாலூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் கந்தன் (19) என்ற வாலிபர் சிகிச்சை பலனினறி இறந்துவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்