மேலும் ஒரு கடைக்காரர் கைது

பெண் பயணியை ஆபாசமாக திட்டிய வழக்கில்மேலும் ஒரு கடைக்காரர் கைது

Update: 2023-10-24 16:35 GMT

திருப்பூர்,

திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டீக்கடைக்கு முன்பு பெண் பயணிகள் அமர்ந்து இருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டீக்கடைக்காரர் பெண்கள் மீது தண்ணீர் ஊற்றி விரட்டினர். இதில் பெண் பயணிக்கும், கடைக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கடைக்காரர் பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் பரவியது.

இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் மத்திய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளுக்கு முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலும் பெண்களிடம் வாக்குவாதம் செய்த கடைக்காரரின் சம்பந்தப்பட்ட கடையை பூட்டி சீல் வைத்தனர். இதுதொடர்பாக திருப்பூர் தெற்கு போலீசார், சம்பந்தப்பட்ட கடைக்காரரான வீரபாண்டியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய டீக் கடைக்காரரான அனில்குமார் (வயது 53) என்பவரை தெற்கு போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்