கோவிலில் மீண்டும் கொள்ளை முயற்சி

மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைகடை மகா விஷ்ணு கோவிலில் மீண்டும் கொள்ளையடிக்க முயற்சியாக மர்ம நபர் நடமாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-21 18:45 GMT

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைகடை மகா விஷ்ணு கோவிலில் மீண்டும் கொள்ளையடிக்க முயற்சியாக மர்ம நபர் நடமாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவிலில் கொள்ளை

மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைகடையில் மகாவிஷ்ணு கோவில் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29-ந் தேதி இரவு டிப் டாப்பாக உடை அணிந்த 2 மர்ம ஆசாமிகள் கோவிலில் புகுந்து அங்கிருந்த 2½ அடி உயர உண்டியலை தூக்கி சென்றனர். பின்னர் அந்த உண்டியலை கோவிலின் அருகே உள்ள தோட்டத்தில் வைத்து உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த கொள்ளை குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

மீண்டும் கொள்ளை முயற்சி

இந்த நிலையில் தற்போது ேகாவிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. நள்ளிரவில் பூைஜகள் முடிந்து பக்தர்கள் வீடுகளுக்கு சென்றனர். அப்போது டிப் டாப் ஆசாமி ஒருவர் முககவசம் அணிந்த நிலையில் கோவில் வளாகத்துக்குள் நுழைந்தார். அவர் கோவில் வளாகத்தை நோட்டமிட்டு கொண்டிருந்தார். அப்போது கோவிலின் உள்ளே ஒரு பக்தர் இருந்தார்.

அவரை கண்டதும் அந்த ஆசாமி அங்கிருந்து வேகமாக வெளியேறி சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த பக்தர் கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். உடனே நிர்வாகிகள் விரைந்து வந்து அந்த நபரை அந்த பகுதியில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் மர்ம ஆசாமிகளால் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் கோவிலில் மர்ம ஆசாமியின் நடமாட்டம் இருந்ததால் அவர் கொள்ளையடிக்க நோட்டமிட வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்