மேலும் 20 டன் குப்பைகள் ஆந்திராவுக்கு அனுப்பி வைப்பு
வேலூரில் இருந்து மேலும் 20 டன் குப்பைகள் ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வேலூர் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. மக்காத குப்பைகளை பொறுத்தவரையில் மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகள், மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகள் என பிரிக்கப்படுகிறது.
இதில் மறுசுழற்சி செய்யமுடியாத குப்பைகள் ஆந்திரா மாநிலத்துக்கு சிமெண்டு தொழிற்சாலைக்கு எரிபொருள் தேவைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. சமீபத்தில் 40 டன் குப்பைகள் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மேலும் 20 டன் குப்பைகள் வேலூரில் இருந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள சிமெண்டு தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.