பாம்பன் பாலத்தில் ஜனவரி 10ம் தேதி வரை ரெயில் போக்குவரத்து ரத்து..!
பாம்பன் பாலத்தில் ரெயில் போக்குவரத்து வரும் ஜனவரி 10ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
சென்னை,
பராமரிப்புப் பணிகள் காரணமாக, பாம்பன் பாலத்தில் ரெயில் போக்குவரத்து வரும் ஜனவரி 10ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
பாம்பன் பாலம் வழியாக ரெயில்கள் செல்ல, வருகிற 31-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அது ஜனவரி 10ஆம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பாம்பன் பாலத்தில் வழக்கமான அளவை விட அதிகமான அளவில் அதிா்வுகள் ஏற்பட்டது கடந்த 23-ஆம் தேதி கண்டறியப்பட்டது. இதையடுத்து, அங்கு பராமரிப்புப் பணிகள் தொடங்கி நடைபெறுகின்றன. இதன் காரணமாக, பாம்பன் பாலத்தில் ரயில்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.