சென்னையில் 6 முதல் 9-ம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு வரும் 18-ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிப்பு

சென்னையில் 6 முதல் 9-ம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு வரும் 18-ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-10 05:40 GMT

சென்னை,

தமிழகத்தில் 2022- 23ஆம் கல்வியாண்டில் 1- 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முழு ஆண்டுத்தேர்வு நடத்துவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் அறிவித்தது. அதில் 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 17 முதல் 21- ஆம்தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வை நடத்தி முடிக்க வேண்டும். 4 முதல் 9 -ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 10-ம் தேதி முதல் 28 தேதிக்குள் தேர்வை நடத்திட வேண்டும். தமிழகத்தில் ஏப்ரல் 28-ந் தேதி பள்ளிக்கு கடைசி வேலை நாள் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் மாநகராட்சி பள்ளிகளில் 6,7,8 மற்றும் 9-ம் வகுப்புகளுக்கு வரும் ஏப்ரல் 18-ம் தேதி முதல் ஏப்ரல் 28-ம் தேதி வரை முழுஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்