தென்காசி அருகே உள்ள மேலகரம் சமுதாய நலக்கூடத்தில் தென் பொதிகை நடைவருவோர் கழக 14-வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தலைவர் ரெங்கநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜகுலசேகர பாண்டியன், பொருளாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலகரம் பேரூராட்சி மன்ற தலைவி வேணி, கடையநல்லூர் உதவி மருத்துவ அலுவலர் ஹாஜா முகைதீன், புரோ விஷன் மருத்துவமனை டாக்டர் ராஜகுமாரி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து உறுப்பினர்களுக்கு புரோ விஷன் மருத்துவமனையுடன் இணைந்து கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.