அரசு தொடக்க பள்ளியில் ஆண்டு விழா
அரசு தொடக்க பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
தேவகோட்டை
தேவகோட்டை ஒன்றியம் கற்களத்தூர் தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்மில்டன் பிராங்கிளின் ஆண்டறிக்கை வாசித்தார். வட்டார கல்வி லெட்சுமி தேவி தலைமை தாங்கினார். உதவி வட்டார கல்வி அலுவலர் மாலதி முன்னிலை வகித்து பரிசுகள் வழங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளார் கார்த்திகேயன், ஆசிரியர் பயிற்றுனர் ராஜசேகரன், கிராம நிர்வாக அலுவலர் சசிக்குமார், கற்களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர், பள்ளி மேலாண்மை குழு தலைவி போதும் பொண்ணு வாழ்த்துரை வழங்கினர்.
இதையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கற்களத்தூர் இசைக் கலைமணி ஞானமுத்து நிகழ்ச்சிகள் மிக சிறப்பாக நடை பெற உதவினார். முடிவில் பள்ளி உதவி ஆசிரியை எமல்டா தேவி நன்றி கூறினார்.