அண்ணா உருவப்படம், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அண்ணா உருவப்படம், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

Update: 2022-09-15 18:45 GMT

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாலக்கரையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்திற்கு சிறப்பு அழைப்பாளரான அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவிற்கு கட்சியின் பெரம்பலூர் நகர செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பிரபாகரன் முன்னிலை வகித்தார். இதில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள அண்ணாவின் முழுஉருவ சிலைக்கு பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வரகூர் அருணாசலம் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்