ரூ.1.34 லட்சம் கோடி; தி.மு.க. அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை... யார் யாருக்கு எவ்வளவு கோடி சொத்து?-வீடியோ

இன்று சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திமுகவின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியீட்டார்.

Update: 2023-04-14 06:14 GMT

சென்னை

கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

முக்கிய திமுக பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை வெளியிடார் அண்ணாமலை

திமுக அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை.. யார் யாருக்கு எவ்வளவு கோடி சொத்து என ஒரு வீடியோ வெளியிட்டார்.

வீடியோவில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, திமுக எம்பி கனிமொழி கருணாநிதி, கலாநிதி மாறன், டி ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, அமைச்சர் பொன்முடி, அமைச்சர் அன்பில் மகேஷ், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன் ஆகியோரின் சொத்து பட்டியல் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சொத்து பட்டியல் தொடர்பான விவரங்கள் என சில தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதன்படி திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.34 லட்சம் கோடி என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அண்ணாமலை கூறியதாவது:-

ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடரும். ஒரு கட்சிக்கு எதிராக மட்டும் நான் சொல்லவில்லை. தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியல் 2024ம் ஆண்டுக்குள் வெளியிடப்படும்.

ஊழலை எதிர்க்க வேண்டும் எனில் மொத்தமாக தான் எதிர்ப்போம். தலைவனாக இருக்கும் வரை இப்படி தான் செயல்படுவேன். அதை செய்யக்கூடாது எனில் தைரியம், திராணி இருந்தால் டில்லி சென்று அண்ணாமலையை மாற்றிவிட்டு வாருங்கள். ஏனெனில் இது பிரதமர் மோடி விரும்பக்கூடிய அரசியல்.

எந்த தயவிலும் நான் எம்.பி., ஆக வேண்டிய அவசியம் இல்லை. 10 தேர்தலில் தோற்றாலும் இங்கு தான் இருப்பேன்.சி.பி.ஐ.,யிடம் செல்கிறோம் அடுத்த பாகம் நீங்கள் நினைத்து பார்க்காத வகையில் இருக்கும். பினாமி சொத்து போன்றவற்றை அதில் பார்க்கலாம். ஹைட்ரோ கார்பன் திட்டம், நீட், ஜல்லிக்கட்டு என அனைத்திலும் கையெழுத்து போட்டது திமுக.

என்னிடம் நிறைய பட்டியல் இருக்கிறது. முதல் பட்டியல் முதல்வர் பற்றி நேரடியாக இருக்க வேண்டும் என வெளியிட்டுள்ளேன். அடுத்தடுத்து அமைச்சர்கள் உள்ளிட்டோரின் பட்டியல் வெளியிடுவேன். இன்னும் 3 பட்டியலை வெளியிட உள்ளேன் என கூறினார்.

Full View


Tags:    

மேலும் செய்திகள்