அண்ணாமலை மற்றும் எல்.முருகன் இலங்கை பயணம்

மத்திய இணை மந்திரி எல்.முருகன் , பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் 3 நாள் பயணமாக இலங்கை புறப்பட்டு சென்றனர்.

Update: 2023-02-09 10:36 GMT

சென்னை,

யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய இணை மந்திரி எல்.முருகன் , பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் 3 நாள் பயணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து இலங்கை புறப்பட்டு சென்றனர்.

இலங்கை பயணம் குறித்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன்,

இலங்கை பயணத்தின் போது தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்படுவது உள்ளிட்ட பிரச்னை குறித்து பேசப்படும் என தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்