அருணாசலேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2022-11-07 16:28 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.

அன்னாபிஷேகம்

திருவண்ணாமலை அருணாசலேவரர் கோவிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இதைெயாட்டி சுமார் 100 கிலோ அரிசியை கொண்டு சாதம் தயார் செய்யப்பட்டு நெய் கலந்து சாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது. மேலும் காய்கறிகள், கொழுகட்டை போன்றவற்றினாலும் அலங்காரம் செய்யப்பட்டது.

அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு கோவிலில் மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை. மாலை 6 மணிக்கு பின்னர் வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு சாமி அன்ன லிங்கமாக காட்சியளித்தார்.

அமர்வு தரிசனம் ரத்து

இக்கோவிலில் அருணாசலேஸ்வரர் மட்டுமின்றி கல்யாணசுந்தரேஷ்வரர் உள்ளிட்ட சிவ லிங்கங்களுக்கும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. பவுர்ணமி கிரிவலம் மற்றும் அன்னாபிஷேகத்தையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்ததால் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

அதேபோல் திருவண்ணாமலையில் திருநேர் அண்ணாமலை கோவிலிலும் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. மூலவருக்கு அன்னம் படையல் படைக்கப்பட்டது. மேலும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும்,

திருவண்ணாமலை சுற்றியுள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்