கோவில்பட்டிசெண்பகவல்லி அம்மன் கோவிலில் அன்னாபிஷேக விழா

கோவில்பட்டிசெண்பகவல்லி அம்மன் கோவிலில் அன்னாபிஷேக விழா நடந்தது.

Update: 2022-11-09 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவன நாத சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் ஐப்பசி அன்னாபிஷேக விழா நடந்தது. முன்னதாக திருவனந்தல் பூஜையும், 8 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. அதனை தொடர்ந்து பூவன நாத சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி வெள்ளைச்சாமி, ஆய்வாளர் சிவகலைப்பிரியா தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடை சாத்தப்பட்டு, இரவு 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடந்தன. இதேபோல் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக் கோவில், மந்தித்தோப்பு துளசிங்க நகர் பூமாதேவி கோவிலிலும் ஐப்பசி அன்னாபிஷேக விழா நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்