அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் என்ற அறிவிப்பு வாபஸ்

அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படும் என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Update: 2023-05-25 04:31 GMT

சென்னை,

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

* வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

* 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் மொழியில் செயல்பட்டு வரும் மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப் பிரிவுகளை தற்காலிகமாக மூடுவதாக அறிவிப்பு

* மாணவர் சேர்க்கை இல்லாததன் காரணமாக இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

* 6 ஆங்கில வழி சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளும் மூடப்படும்.

என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், இந்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக  அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்