திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான, அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கட்சி அலுவலகத்தில் வைத்திருந்த அண்ணா உருவப்படத்துக்கு கட்சியினர் மாலை அணிவித்து ஊர்வலமாக புறப்பட்டனர். பின்னர் திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் திருச்சி கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேகரன், வண்ணை அரங்கநாதன், மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், மூக்கன், லீலாவேலு மற்றும் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி சூரியூர் ஊராட்சியில் படிப்பு மற்றும் பயிற்சி நூலகத்தை திறந்து வைத்தார். இதில் சூரியூர் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.