அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி
திருவாரூரில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி இன்று(சனிக்கிழமை) நடக்கிறது என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.;
திருவாரூரில் கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெடுந்தூர ஓட்டப்போட்டி
2023-24-ம் ஆண்டிற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கையின் போது துறை அமைச்சர், அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்கும் அனைத்து மாவட்டங்களிலும் மாரத்தான் போட்டிக்கு இணையான அண்ணா நெடுந்தூர ஓட்ட போட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவாரூர் மாவட்ட விளையாட்டுப்பிரிவால் நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.
இன்று நடக்கிறது
அதன்படி 17 முதல் 25 வயதுக்குட்பட்ட மற்றும் 25 வயதுக்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆண்கள், பெண்கள் ஆகியோர்களுக்கு இன்று (சனிக்கிழமை) திருவாரூர் மாவட்டத்தில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்பந்தய போட்டி காலை 6.30 மணிக்கு நடத்தப்பட உள்ளது. திருவாரூர் நகராட்சி அலுவலகம் தொடங்கி மேல வீதி, வடக்கு வீதி, கீழவிதி, தெற்கு வீதி வழியாக சென்று மீண்டும் நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைகிறது.
போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவகள், மாணவரல்லாதோர் மற்றும் பொதுமக்கள் ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளலாம்.17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ தூரமும், 25 வயதிற்குமேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ தூரமும் ஓட்ட பந்தயம் நடத்தப்பட உள்ளது. போட்டிகள் அனைத்தும் இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கப்படும்.
பரிசு
பரிசு தொகை நேரடியாக வங்கி; கணக்கில் செலுத்திடும் வகையில் வங்கி கணக்குபுத்தக நகலுடன் கலந்து கொள்ள வேண்டும். மேற்படி போட்டியில் ஒவ்வொறு பிரிவிலும் முதலிடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும், 2-ம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.3ஆயரம், 3-ம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரமும்,, 4 முதல் 10 இடம் வரை பெறுபவர்களுக்கு தலா ரூ.1000-ம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். எனவே திருவாரூர் மாவட்டத்தை சார்ந்த பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆண்கள், பெண்கள் அண்ணா நெடுந்தூர ஓட்டப்பந்தயப் போட்டியில் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.