அமராபுரத்தில் கால்நடை சிறப்பு முகாம்
அமராபுரத்தில் கால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது.
உடன்குடி:
உடன்குடிஅருகே உள்ள மணப்பாடு புனித வளன் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் மாதவன்குறிச்சி ஊராட்சி அமராபுரம் கிராமத்தில் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சேர்மத்துரை தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் கருப்பசாமி, வார்டு உறுப்பினர் சுடலைவடிவு, பள்ளி (பொறுப்பு) தலைமை ஆசிரியர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
3-ம் நாள் முகாமில் குலசேகரன்பட்டினம் கால்நடை மருத்துவ அலுவலர் வினோத்குமார் ஏராளமான கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் பல்வேறு மருத்துவ வசதிகளை செய்தார். ஏற்பாடுகளை திட்ட அலுவலர் டேனியல் செய்திருந்தார்.