மாயூரநாதர் கோவிலில் ஆனி திருவிழா

மாயூரநாதர் கோவிலில் ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-07-03 19:45 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம்-மதுரை சாலையில் அமைந்துள்ள மாயூர நாதர் சுவாமி கோவிலில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கொடியேற்றப்பட்டது. கொடியேற்றத்தை முன்னிட்டு மாயூரநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழாவையொட்டி வருகிற 9-ந் தேதி திருக்கல்யாணம், 11-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜா மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்