கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-03-29 18:33 GMT

அரியலூர் பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, அரியலூர் மாவட்ட பொருளாளர் ஜோதிலெட்சுமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ரம்யா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும். பதிவேடு அல்லது செல்போன் இரண்டில் ஒன்றை மட்டும் உறுதிப்படுத்த வேண்டும். மகப்பேறு விடுப்பு ஒரு வருடம் அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும். 10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்