அரசு பஸ் மோதியதில் அங்கன்வாடி பணியாளர் சாவு

Update: 2023-09-06 19:30 GMT

ஓசூர்:-

சூளகிரி அருகே அத்திமுகத்தை சேர்ந்தவர் வெங்கடேசப்பா. இவரது மனைவி அலமேலு (வயது 58). இவர் அத்திமுகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அங்கன்வாடி பணியாளராக வேலை செய்து வந்தார். அவர் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பேரண்டப்பள்ளி பஸ் நிறுத்தம் பக்கமாக நடந்து சென்ற போது அந்த வழியாக சென்ற அரசு பஸ் அலமேலு மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்