இந்திய கிரிக்கெட் வீரர் டோனி பிறந்த நாளை முன்னிட்டு 77 அடி உயர கட்டவுட் வைத்து,பைக் பேரணி நடத்திய ஆந்திர ரசிகர்கள்

மகேந்திர சிங் தோனியின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாட முடிவு செய்தனர்.

Update: 2023-07-07 05:07 GMT

திருப்பதி, 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் 41-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

ஆந்திர மாநிலம் என் டி ஆர் மாவட்டம் பகுதியை சேர்ந்த மகேந்திர சிங் தோனியின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாட முடிவு செய்தனர். அதன்படி ஐதராபாத்-விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் அம்பருபேட்டை ,எஸ்சி காலனியில் 77 அடி உயரமுள்ள மகேந்திர சிங் தோனியின் கட்டவுட் வைத்தனர்.

மேலும் அங்குள்ள சத்தியபாமா கோவிலில் மகேந்திர சிங் தோனி பெயரில் சிறப்பு பூஜைகள் செய்தனர்.பின்னர் 200-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கீசரா வரை தேசிய நெடுஞ்சாலையில் பைக் பேரணி நடத்தி தோனியின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்