மோசமான வானிலை அந்தமான் விமானம் சென்னை திரும்பியது

மோசமான வானிலை நிலவியதால் அந்தமான் சென்ற விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து தரையிறங்கியது.;

Update:2023-09-07 12:01 IST

சென்னை மீனம்பாக்கம் காமராஜர் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு 151 பயணிகளுடன் விமானம் செல்ல தயாராக இருந்தது. ஆனால் அந்தமானில் மோசமான வானிலை நிலவுவதால் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது. ஆனால் அந்தமான் விமான நிலையத்தை நெருங்கி கொண்டு இருந்தபோது அங்கு மோசமான வானிலை நிலவியது. இதனால் விமானம் அந்தமானில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துகொண்டு இருந்தது.

இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, விமானத்தை மீண்டும் சென்னைக்கு திரும்பி வர அறிவுறுத்தினர். அதன்படி விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து தரையிறங்கியது. மேலும் விமானம் ரத்து செய்யப்படுவதாகவும், பயணிகள் அதே டிக்கெட்டில் அந்தமானுக்கு பயணிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால் அந்தமானுக்கு செல்வதற்காக வந்து சுமார் 10 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்தும் திரும்பி வந்ததால் பயணிகள் அனைவரும் ஏமாற்றத்துடன் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்