சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்
சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருமயம்:
திருமயத்தில் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் ஆண்டாள் ஆடிப்பூர திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக அம்பாளுக்கும், சத்தியமூர்த்தி பெருமாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சத்தியமூர்த்தி பெருமாளையும், அம்பாளையும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு ஆகிய நிகழ்ச்சிகள் வீதி உலாவாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு 8 மணி அளவில் வேத மந்திரங்கள் கூறி மேளதாளங்கள் முழங்க, மங்கல இசையுடன் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. பின்னர் ஆண்டாள், சத்தியமூர்த்தி பெருமாள் சாமிதம்பதிகளாக பல்லக்கில் வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக வீதி உலா சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.