மேலும் பலரிடம் மளிகை பொருட்கள் வாங்கி லட்சக்கணக்கில் மோசடி
கோவையில் மேலும் பலரிடம் மளிகை பொருட்கள் வாங்கி லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக கைதான வியாபாரி மீது போலீசில் புகார்கள் குவிந்து வருகிறது.
கோவையில் மேலும் பலரிடம் மளிகை பொருட்கள் வாங்கி லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக கைதான வியாபாரி மீது போலீசில் புகார்கள் குவிந்து வருகிறது.
வியாபாரி கைது
கோவை சவுரிபாளையம் கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் பாபு என்ற கோபி (வயது 40). வியாபாரி. இவர் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் இருந்து மளிகை மற்றும் விவசாய பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.
மளிகை பொருட்கள் வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக கோபி மீது அன்னூர் மற்றும் ஈரோட்டை சேர்ந்த வியாபாரிகள் கோவை பீளமேடு போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் கோபியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் பலரிடம் மோசடி
இந்த நிலையில் ஆனைமலையை சேர்ந்த செந்தில்குமார் (40) என்பவர் கோபிக்கு கடந்த மாதம் ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்துக்கு தேங்காய் எண்ணெய் கொடுத்து உள்ளார்.
அதற்குரிய பணத்தை கோபி தராததால் செந்தில்குமார் பீளமேடு போலீசில் புகார் அளித்தார்.
இதேபோன்று கோபியிடம் சேலம் மாவட்டம் அம்மாபாளையத்தை சேர்ந்த முகமது இஸ்மாயில் ராஜா என்பவர் ரூ.1 லட்சம் நூடுல்ஸ், கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த பவித்திரன் (27) ரூ.32 ஆயிரத்துக்கு தேங்காய் எண்ணெய், சமையல் எண் ணெய்,
அன்னூரை சேர்ந்த தனபாலன் (27) என்பவர் ரூ.1 லட் சத்து 10 ஆயிரத்துக்கு தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், சத்தியமங்கலத்தை சேர்ந்த கார்த்திகேயன் (33) என்பவர் ரூ.1 லட் சத்து 56 ஆயிரத்துக்கு அரிசி, தேங்காய் எண்ணெய் விற்பனை செய்துள்ளனர்.
வழக்கு பதிவு
அன்னூரை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் என்பவர் கோபியிடம் ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்துக்கு 90 மூட்டை அரிசி விற்று உள்ளார்.
அந்த வகையில் தங்களிடம் வாங்கிய மளிகை பொருட்களுக்கான ரூ.6 லட்சத்து 98 ஆயிரத்தை கோபி தரவில்லை என்று 6 பேர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் கோபி மீது 2 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில், ஏராளமான வியாபாரிகளிடம் ரூ.15 லட்சத்துக்கும் மேல் கோபி மோசடி செய்ததாக கூறப்படு கிறது.
இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.