பழங்கால கோட்டை, அகழியை வேலூர் சரக டி.ஐ.ஜி. பார்வையிட்டார்

வந்தவாசியில் பழங்கால கோட்டை, அகழியை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி பார்வையிட்டார்

Update: 2023-08-20 11:21 GMT

வந்தவாசி

வரலாற்று சிறப்பு வாய்ந்த வந்தவாசி போர் 1760-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி நகரில் இருக்கும் கோட்டையை கைப்பற்ற நடந்த போராகும்.

இந்த போரில் ஆங்கில தளபதி அயர்கூட் தலைமையிலான படை பிரெஞ்சு தளபதி தாமஸ் ஆர்தர்லாலி தலைமையிலான படையை தோற்கடித்தது.

இந்தியாவில் வந்தவாசியில் நடைபெற்ற போரில் பிரெஞ்சுக்காரர்கள் வீழ்ச்சியடைந்தனர்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க பழங்கால கோட்டை மற்றும் கோட்டை அகழி, குதிரை லாயம் மற்றும் போரில் பயன்படுத்திய பீரங்கியை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்