அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பரபரப்பு - திடீரென சரிந்து விழுந்த மேடை

அதிர்ஷ்டவசமாக அன்புமணி ராமதாஸ் காயங்கள் ஏதுமின்றி தப்பினார். .இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-05 12:41 GMT

சேலம், வாழப்பாடி பகுதியில் பாமக கட்சிக் கொடி ஏற்று விழா இன்று பிற்பகல் நடைபெற்றது. விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார். அன்புமணி ராமதாஸ் மேடையில் ஏறி பேச சென்ற போது கட்சி தொண்டர்களும் அவருடன் மேடைக்கு சென்றுள்ளனர்

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென மேடை சரிந்து விழுந்ததில் அனைவரும் கீழே விழுந்தனர். எனினும் கீழே விழுந்தவர்கள் அனைவருக்கும் எந்த காயமும் இன்றி தப்பினர். அதிர்ஷ்டவசமாக அன்புமணி ராமதாஸ் காயங்கள் ஏதுமின்றி தப்பினார். .இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்