அர்ஜுனா விருது வென்ற தமிழக சதுரங்க வீராங்கனை வைஷாலிக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து...!

அர்ஜுனா விருது வென்ற தமிழக சதுரங்க வீராங்கனை வைஷாலி, கிரிக்கெட் வீரர் முகமது சமி உள்ளிட்டோருக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update:2023-12-20 20:25 IST

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

விளையாட்டுத்துறையில் சாதனை படைத்ததற்காக அர்ஜுனா விருதுக்காக தேர்வாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சதுரங்க வீராங்கனை வைஷாலி, கிரிக்கெட் வீரர் முகமது சமி, கபடி வீரர் பவன்குமார் உள்ளிட்ட 26 பேருக்கும், தயான்சந்த் கேல்ரத்னா விருத்துக்கு தேர்வாகியுள்ள இறகுபந்தாட்ட வீரர்கள் சிராக் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி ஆகியோருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியார் விருதுக்கு தேர்வாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சதுரங்க பயிற்சியாளர் ஆர்.பி. ரமேஷ், சிறந்த பயிற்சியாளர்களில் வாழ்நாள் சாதனைக்கான துரோணாச்சாரியார் விருதுக்கு தேர்வாகியுள்ள கபடி பயிற்சியாளர் பாஸ்கரன் உள்ளிட்டோருக்கும் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். விளையாட்டுத்துறையில் இவர்கள் மேலும் சாதனைகளை படைக்க வாழ்த்துகள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்