தேமுதிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரேமலதா விஜயகாந்துக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சென்னை,
தேமுதிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரேமலதா விஜயகாந்துக்கு பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறுகையில்,
"சென்னையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பிரேமலதாவுக்கு தனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.