மது விற்ற முதியவர் கைது

மது விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-13 18:49 GMT

விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் விராலிமலை சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையிலான போலீசார் விராலிமலை ஈஸ்வரி நகர் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 60) என்பவர் தனது வீட்டில் வைத்து மது விற்பனை செய்வதை கண்டறிந்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 9 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்