வேகமாக வந்த ரெயில்... தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய முதியவர்

தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் ரெயில் வந்ததால் தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பி உள்ளார்.;

Update: 2024-04-12 18:07 GMT

கோப்புப்படம் 

திருப்பூர்,

ஜெய்ப்பூரில் இருந்து கோவை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் திருப்பூர் கல்லம்பாளையம் அருகே சென்றபோது, தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவரை எமர்ஜென்சி பிரேக் போட்டு என்ஜின் டிரைவர் காப்பாற்றினார்.

ரெயில் அருகில் வருவதைப் பார்த்த முதியவர் உடனடியாக தண்டவாளத்தில் படுத்தார். இதை பார்த்து சுதாரித்துக்கொண்ட ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக பிரேக் பிடித்து ரெயிலை நிறுத்தினார். இருப்பினும், ரெயில் என்ஜின் அந்த முதியவரைத்தாண்டி சென்று நின்றது. அந்த முதியவர் ரெயில் என்ஜினுக்கு அடியில் சிக்கிக்கொண்டார். பின்னர், உடனடியாக தண்டவாளத்தில் இறங்கி வந்து பார்த்த என்ஜின் டிரைவர் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் ரெயிலை பின்னோக்கி இயக்கி அந்த முதியவரை மீட்டனர்.

இதில் அந்த முதியவருக்கு தலை, உடலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் உதவியோடு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு முதியவரை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் வந்ததால் அவர் தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பி உள்ளார். உடனடியாக ரெயிலை நிறுத்திய என்ஜின் டிரைவரை அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள். இந்த சம்பவத்தால் ரெயில் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

Full View

Tags:    

மேலும் செய்திகள்