விபத்தில் முதியவர் பலி
ஸ்ரீவில்லிபுத்தூரில் விபத்தில் வாலிபர் பலியானார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரபாண்டியத்தை சேர்ந்தவர் சந்தானம் (வயது 70). இவர் தனது உறவினருடன் மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்து சென்று ெகாண்டு இருந்தார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் சந்தானம் படுகாயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.